வேடசந்தூர், மார்ச்.30-திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை மாநில செயலாளர் டாக்டர் வி.பி.பி.பரமசிவம் வேடசந்தூரில் தனது பிரச்சாரத்தை தொடங்கி பேசியபோது கூறியதாவது:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் என்.டி.ஏ. கூட்டணி வேட்பாளராக என்னை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
வேடசந்தூர் தொகுதியில் அதன் எழுச்சியை இன்றைக்கு நேரடியாக அனைவரும் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். வேடசந்தூர் தொகுதியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் கட்சி தான் 50 ஆண்டு காலமாக தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்துக் கொண்டிருக்கிறது.

இந்த முறை அதிமுகவுக்கு வேடசந்தூர் சட்டமன்ற தொகுதி மக்கள் அந்த வரலாற்றுப் பெருமையை வழங்குவார்கள் என்று நம்புகிறேன். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சியை ஒட்டு ஒட்டுமொத்த தமிழக மக்களே வழங்குவார்கள்.
வெற்று விளம்பரம் பொய் வாக்குறுதி மூலம் தமிழகத்தை கடந்த ஐந்து ஆண்டுகளாக தலை குனிய வைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப தமிழக மக்கள் தயாராகி இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் அதிமுக அலை வீசுகிறது அனைத்து தொகுதி மக்களும் தங்களின்க் மவுனத்தை கலைத்துள்ளனர். தமிழக முழுவதும் அனைத்து தொகுதிகளும் அதிமுக அமோக வெற்றி பெற்று மீண்டும் அதிமுக ஆட்சியை பிடிக்கும்.
மகளிருக்கு மாதந்தோறும் ரூ 2 ஆயிரம் வழங்குதல், குடும்பத்திற்கு வருடத்திற்கு 3 கேஸ் சிலிண்டர்கள் உள்ளிட்ட அதிமுக தேர்தல் அறிக்கை அனைத்து தரப்பு மக்களும் வரவேற்று வருகின்றனர். திமுக ஆட்சியில் மக்கள் மீது தேவையில்லாமல் செலுத்தப்பட்ட வரியை முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி வந்தவுடன் அனைவருக்கும் அதை திருப்பித் தர உள்ளார்.

மக்களை சுட் டு எரித்த சூரியன் கடந்த ஐந்தாண்டு சுற்றி எரித்தது. இனி இரட்டை இலையால் அனைவரும் குளிர்ச்சியாவார்கள்.
பேட்டியின் போது வேடசந்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர்தள் ஜான்போஸ், பழனியம்மாள், குஜிலியம்பாறை ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன், வேடசந்தூர் நகர செயலாளர் பாபுசேட் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.




