• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வ.உ.சிதம்பரம் பிள்ளை சிலை திறப்பு..,

கன்னியாகுமரி வெள்ளாளர் சமூக அமைப்பின் சார்பில் கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரது 89_ வது நினைவு தினத்தின் நிறைவை போற்றும் வகையில். கன்னியாகுமரி முத்தாரம்மன் திரு கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
வெள்ளாளர் அறக்கட்டளைக்கு சொந்தமான தங்கும் விடுதியில்.

கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரம் பிள்ளையின் படத்திற்கு. கன்னியாகுமரி
சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன். அங்கு நிறுவப்பட்ட வ.உ. சிதம்பரம் பிள்ளையின் சிலையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்வில் தளவாய் சுந்தரம் அங்கு இருந்த பெண்களுக்கு இலவசமாக அரிசி
மற்றும் பலசரக்கு பொருட்களை வழங்கினார்.

கன்னியாகுமரி வெள்ளாளர் சமூக ஊர் தலைவர் கிருஷ்ணன் பிள்ளை, பொருளாளர் கண்ணன், கமிட்டி உறுப்பினர்கள் அனைத்து வகை ஏற்பாடுகளையும்
ஒருங்கிணைத்தார்கள்.