• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

4 வருடங்களாக பயனற்ற குடிநீர் டேங்க் . அச்சத்தில் மக்கள் கோரிக்கை ;

By

Aug 27, 2021 ,

தஞ்சை மாநகராட்சிக்குட்பட்ட 51வது வார்டில் புதிய வீட்டு வசதி வாரியம் அமைந்துள்ள நேதாஜி நகரில் ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் 5 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது . இநீர்த்தேக்கத் தொட்டி கட்டி முடிக்கப்பட்டு 4 ஆண்டுகளாகியும் இதுவரை பயன்பாட்டிற்கு வராமலேயே உள்ள தெரிவித்தனர் .

இந்நிலையில் தற்போது பெய்த மழைக்காரணமாக நீர்த்தேக்கத் தொட்டியின் நான்குபுறமும் மழைநீர் கசிந்து வடிந்து வருகின்றன. மேலும் தொட்டியின் மேல்தளத்தில் பூசப்பட்டுள்ள சிமெண்ட் கான்கிரீட் ஆங்காங்கே சேதமடைந்து வெடிப்புகள் ஏற்பட்டு உள்ளது.அந்த குடிநீர் தொட்டி கட்டப்பட்டு உள்ள பகுதியில் நான்குபுறமும் வீடுகள் உள்ளதால் தொட்டியில் தேங்கிக் கசிந்துவரும் மழைநீரால் அச்சம் உள்ளதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். புதிதாக கட்டப்பட்டுள்ள இந்த குடிநீர் தொட்டியில் குடிதண்ணீர் இன்னும் நிரப்பப்படாமல் இருக்கும் நிலையில், மழைநீர் தேங்கியே தொட்டி கசிந்துவருகிது வேதனையை தெரிவித்தனர்.

 

மேலும் தொட்டி முழுவதும் குடி நீர் நிரப்பப்பட்டால் நான்குபுறமும் முழுமையாக கசிந்து எந்த நேரமும் தொட்டி இடிந்து விழுந்து விடும் என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளல், அதை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.