• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

யு.பி.எஸ்ஸி முதல்நிலை தேர்வு ஒத்திவைப்பு

Byவிஷா

Mar 20, 2024

மக்களவைத் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, யு.பி.எஸ்.ஸி தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வாணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது..,
மே 26 நடைபெறவிருந்த யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு ஜுன் 16ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமை பணிகளுக்கான தேர்வுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தி வருகிறது. அந்தவகையில் 2024ம் ஆண்டுக்கான முதல்நிலைத் தேர்வுகளை மே 26ம் தேதி நடத்த தேர்வாணையம் திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தல் காரணமாக யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வை ஜுன் 16ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.