• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

விவசாயத்தையும் இயற்கையையும் போற்றும் வகையில் சிலைகள் திறப்பு..,

BySeenu

Jul 26, 2026

கோவை மாநகராட்சி சார்பாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் விவசாயத்தின் பெருமையும் முக்கியத்துவத்தையும் பறைசாற்றும் மற்றும் போற்றும் விதத்தில் கோவை ஆத்துப்பாலம் சந்திப்பில் பெண்கள் நாற்று நடுவது போல் சிலைகளையும்,கோவை போத்தனூர் குறிச்சி பிரிவு சந்திப்பில் நீர்,நிலம், காற்று,நெருப்பு,ஆகாயம் ஆகிய பஞ்சபூதங்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலுமான சிலைகளை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் மற்றும் கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா ஆகியோர் கலந்து கொண்டு சிலைகளை திறந்து வைத்தனர்.

அதேபோல் விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் விவசாய என்பது நாட்டின் முதுகெலும்பு எனவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாற்று நடுவது நிறுவப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.

தாய்மையின் கருவை போல பூமியை நாம் பேணி பாதுகாக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலும் இயற்கை அன்னை பூமியையே கருவாக சுமந்து இருப்பது போல் இந்த சிலையானது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிலைகளை வடிவமைத்த சென்னையைச் சேர்ந்த பிளாக் ஷீப் மீடியா நிறுவனத்தினர் சதீஷ்குமார் மற்றும் மகாபிரபு இருவரும் தயாரித்துள்ளனர்..