• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பாகிஸ்தானில் வரலாறு காணாத வெள்ளம்… 1000க்கும் மேற்பட்டோர் பலி..

ByA.Tamilselvan

Aug 29, 2022

வரலாறு காணாத வெள்ள பாதிப்பைச் சந்தித்துள்ள பாகிஸ்தானில் தற்போது வரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
150 மாவட்டங்களில் 110 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஜூலை மாத இறுதியில் தொடங்கிய பருவமழையானது கடந்த இரு வாரங்களாக வரலாறு காணாத சீற்றத்துடன் பொழிந்து கடும் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியுள்ளது.வெள்ள பாதிப்பானது சிந்த், பலுசிஸ்தான், கைபர் பக்துன்கா ஆகிய மாகாணங்களில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. பருவமழை பாதிப்பில் சிக்கி இதுவரை 1,033 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 119 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.நாட்டின் 15 சதவீத மக்கள்தொகை அதாவது 3.3 கோடி மக்கள் வெள்ளத்தின் பிடியில் சிக்கியுள்ளனர். 8.09 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்கள், 3,451 கிமீ சாலைகள், 149 பாலங்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. 9.49 லட்சம் வீடுகள் சேதமடைந்த நிலையில், சுமார் 7 லட்சம் கால்நடைகள் இந்த வெள்ள பாதிப்பில் சிக்கி உயிரிழந்துள்ளன.
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஷ் ஷெரிப் தனது பிரிட்டன் பயணத்தை ரத்து செய்து, வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு வருகின்றார். மேலும், சர்வதேச நாடுகளும் அமைப்புகளும் பாகிஸ்தானுக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.