• Fri. Dec 13th, 2024

தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது…

ByA.Tamilselvan

Aug 29, 2022

தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது.
இன்று மாலை 6 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்று தமிழகத்தின் நலன்சார்ந்த பல்வேறு முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க உள்ளனர். குறிப்பாக சென்னையை அடுத்த பரந்தூரில் அமைய உள்ள 2ஆவது விமான நிலைய விவகாரம் முக்கியமான இடத்தை பிடிக்கும் என்று தெரிகிறது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாகவும் விவாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.அறிக்கையை சட்ட சபையில் வைப்பதா அல்லது நேரடியாக மக்கள் பார்வையில் வெளியிடுவதா என்பது பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்படுகிறது. ஏற்கனவே தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான அறிக்கையும் தமிழக அரசிடம் அளிக்கப்பட்டள்ளது.இந்த அறிக்கை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே எப்போது சட்டசபையை கூட்டலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது. மேலும் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களை தடை செய்வது குறித்த அவசர சட்டம் நிறைவேற்றுவது சம்பந்தமாகவும் முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது.
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க இருப்பதையொட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து மக்களை பாதுகாப்பது பற்றியும், வெள்ளத்தடுப்பு, மழைநீர் வடிகால் மற்றும் பாதாள சாக்கடை பணிகளை துரிதப்படுத்துவது சம்பந்தமாகவும் ஆலோசிக்கப்படுகிறது.