• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு ஆளில்லா கடை திறப்பு

ByA.Tamilselvan

Oct 3, 2022

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பஸ் நிறுத்தத்தில், மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு நேற்று ஆளில்லா கடை திறக்கப்பட்டது.
கடையில் வீட்டு உபயோகப் பொருட்கள், எழுது பொருட்கள், திண்பண்டங்கள் ஆகியவை வைக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு பொருட்களின் மேலும் அதன் விலை அச்சிடப்பட்டு இருந்தது. பொருட்களின் அருகே ஒரு டப்பா வைக்கப்பட்டு இருந்தது. இந்த கடைக்கு வருபவர்கள் தங்களுக்கு தேவையான பொருளை எடுத்துக்கொண்டு அதற்குரிய தொகையை அங்கு வைக்கப்பட்டு இருந்த டப்பாவில் போட்டு விட்டு சரியான சில்லரையை எடுத்து சென்றனர். ஆளில்லா கடை திறப்பு நிகழ்ச்சியில் பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு பூரணி மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.