மகாத்மா காந்திஜி பிறந்த நாளை முன்னிட்டு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வேல்மணி பாண்டியன் தலைமை தாங்கினார் .மாவட்ட கவுன்சிலர் ஜி.கே. பாண்டியன் முன்னிலை வகித்தார் .ஊராட்சி செயலர் தயாளன் வரவு செலவு இனங்களை வாசித்து தீர்மானங்கள் குறித்து விளக்கினார்.
கடந்த பலமுறை நடந்த கிராம சபை கூட்டங்கள் ராஜகோபாலன்பட்டி ஊராட்சியில் பல்வேறு கிராமங்களில் நடைபெற்றது.இந் நிலையில் கிராம சபை கூட்டம் என்பது என்னவென்று தெரியாது இருந்த, ஆதிதிராவிடர் பகுதியில் முதல் முறையாக ,பல வருடங்களுக்கு பின்பு கிராம சபை கூட்டம் நடத்திய ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட நிர்வாக குழுவிற்கு நன்றி தெரிவித்து அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர் .
மேலும் இப்பகுதியில் உள்ள திம்மரச நாயக்கனூர் ,பொம்மிநாயக்கன்பட்டி ,டி சுப்புலாபுரம் ,ராஜகோபாலன் பட்டி ஆகியவற்றை இணைக்கும் வகையில் இணைப்புச் சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
