• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரையில் ஐக்கிய ஜனதா தளம் தென் மண்டல தேர்தல் ஆலோசணைக் கூட்டம்

Byகுமார்

Feb 18, 2024

பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இணைந்து தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, கடலூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு மற்றும் ஒரு ரிசர்வ் தொகுதி உட்பட 5 தொகுதிகளை கேட்டுள்ளோம் என மாநில தலைவர் மணிநந்தன் மதுரையில் பேட்டி..,

ஐக்கிய ஜனதா தளம் தென் மண்டல தேர்தல் ஆலோசணைக் கூட்டம் மதுரையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் முருகப்பன் தலைமை வகித்தார். மாநில தொழிலாளர் அணி தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் சுப்பிரமணியன் வரவேற்றார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட மாநில தலைவர் மணி நந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது..,
வரவுள்ள 2024 லோக்சபா தேர்தலில் தேசிய தலைவர் நிதிஷ்குமார் உத்தரவின் பேரில் தமிழக ஐக்கிய ஜனதா தளம் பாஜவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளது. பீகாரில் பாஜ ஆதரவுடன் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி அமைத்திருந்தாலும், தமிழக அரசில் நிலவரத்தை பொறுத்து பாஜ கூட்டணியில் நீடிக்கலாமா என மாவட்ட தலைவர்களுடம் ஆலோசித்து முடிவெடுக்கவே இந்த கூட்டம் நடக்கிறது.
பாஜ கூட்டணியில் இணைந்து தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, கடலூர், தூத்துக்குடி, செங்கல்பட்டு மற்றும் ஒரு ரிசர்வ் தொகுதி உட்பட 5 தொகுதிகளை கேட்டுள்ளோம். எங்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள இடங்களை ஒதுக்கினால் கூட்டணியில் பயணிப்போம். அவர்களிடம் முறையான அணுகுமுறை இல்லையென்றால் வேறு முடிவு எடுக்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மாநில செயலாளர்கள் சந்திரன், ஜான் பி.ராயன், சுந்தர்ஈசன், தங்கப்பாண்டியன், கொள்கை பரப்பு செயலாளர் கோபி, மீனவ அணைத் தலைவர் ஜூலியஸ் கஸ்பார், 10 மாவட்ட தலைவர், செயலாளர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.