இன்று புதுக்கோட்டை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மத்திய அமைச்சர் பிஎஸ் கோயல் கலந்து கொண்டு புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ராமச்சந்திரனுக்கு வாக்குகள் சேகரித்து உரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது
புதுக்கோட்டை தேர்தலில் பொறுத்து இங்கு பாஜகவினருடன் கூட்டணி கட்சிகள் அனைவரும் இணைந்து அருமையாக செயல்படுகிறார்கள். புதுக்கோட்டை வேட்பாளர் ராமச்சந்திரன் வெற்றி பெற்று எம் எல் ஏ ஆகிவிடுவார் என்ற நம்பிக்கையுடன் நான் இங்கிருந்து செல்கிறேன் அந்த அளவுக்கு ஒற்றுமையுடன் அனைவரும் தேர்தல் பணி ஆற்றி வருகிறார்கள். தமிழ்நாடு ஒரு அருமையான நாடு. இந்த அருமையான நாட்டை திமுக கமிஷன் கலெக்சன் கரப்ஷன் என ஒட்டுமொத்தமாக கெடுத்து வைத்திருக்கிறார்கள். புதுக்கோட்டை மக்கள் உதயநிதியை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். குறிப்பாக அவர் சனாதனம் குறித்து பேசுவதால் தமிழ் மக்கள் உணர்வை பண்பாட்டை புண்படுத்தி விட்டார்.

நெல் கொள்முதல் பொறுத்த மட்டிலும் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது செய்த நெல் கொள்முதல் விட 500 மடங்கு அதிகமாக நரேந்திர மோதி அவர்களின் அரசியல் கொள்முதல் செய்திருக்கிறோம். ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் புதுக்கோட்டையில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் நாம் குடி நீரைக் கொடுத்திருக்கிறோம்.

நமது சகோதரிகளும் மகள்களும் திமுக அரசு ஆட்சியின் கீழ் பாதுகாப்பு இல்லாத தன்மையில் ஒரு பயத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
போதை பொருள் மூலமாக நமது இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சுகாதார துறை மிக மோசமாக இருக்கிறது.
கட்டமைப்புகள் எதுவுமே சரியாக இல்லை மேம்படுத்தப் படவில்லை.
மு. க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், கனிமொழி, சபரீசன் ஆகியோர் ஊழல் செய்வதிலும் பணம் சம்பாதிப்பதிலும் குறியாக இருக்கிறார்கள். அதில் தான் பிசியாகவும் இருக்கிறார்கள். இந்த முறை காங்கிரஸ் திமுக இந்திய கூட்டணியை புறக்கணிக்க போகிறது. 23ஆம் தேதி மக்கள் கிளம்பிச் சென்று வாக்களிக்க போகிறார்கள்.

திமுகவை வீட்டுக்கு அனுப்பப் போகிறார்கள். புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் ஆட்சியை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைக்கப் போகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆகிறார். புதுக்கோட்டை வேட்பாளரான படித்த பண்பாளர் ஆன ராமச்சந்திரனுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
கருணாநிதி குடும்பம் நடத்தும் பள்ளிகளில் ஏன் மாணவர்களுக்கு தமிழைச் சொல்லித் தரவில்லை? ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தமிழைச் சொல்லித் தர வேண்டும். இந்த மொழியை தான் சொல்லித் தர வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை எந்த இடத்திலும் வரையறுக்க வில்லை. ஸ்டாலின் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று செய்தியாளர்களிடம் பேசினார்.




