• Tue. Dec 10th, 2024

பட்டப்படிப்பை முடித்த 6 மாதத்தில் பட்டம் வழங்க யு.ஜி.சி. உத்தரவு

பட்டப்படிப்பை முடித்த 180 நாள்களுக்குள் கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்க பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யு.ஜி.சி. பிறப்பித்த உத்தரவில் தெரிவித்திருப்பதாவது, பட்டப்படிப்பை முடித்த 180 நாள்களுக்குள் கல்லூரி மாணவர்களுக்கு பட்டம் வழங்க வேண்டும். பட்டங்களை தாமதமாக வழங்குவது மாணவர்களின் வேலை வாய்ப்பில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.எனவே, 180 நாள்களுக்குள் பட்டம் வழங்காத பல்கலைக்கழகங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாமதமாக பட்டம் வழங்குவதாக மாணவர்கள் புகார் அளித்ததால் பல்கலைக்குழு மானியக்குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.