புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஒன்பது வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா புதுக்கோட்டை நடைபெற்றது
விழாவில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு 30 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கி சிறப்புரையாற்றினார்

இதில் அமைச்சர்கள் ரகுபதி மெய்ய நாதன் ஆட்சியர் அருணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
புதுக்கோட்டை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு அமைச்சர்கள் ரகுபதி , மெய்யநாதன் ஆகியோர் போட்டி போட்டுக்கு கொண்டு திட்டங்களை கொண்டு வந்துள்ளனர்.
இவர்களால் மாவட்டத்திற்கும் எங்களுக்கும் பெருமை- மகளிர் கூடுதல் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விடியல் பயணத்திட்டம், புதுமைப்பெண்கள் திட்டம்
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்,
பெண்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இந்த இத்திட்டத்தை முடக்க சிலர் நினைத்தார்கள், அதனாலையே மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்து வந்ததை 3 மாதத்திற்கும் சேர்த்து தற்போது 5 ஆயிரம் வழங்கி உள்ளார்.
திராவிட மாடல் ஆட்சியில் விளையாட்டுத்துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது-
ஒரு காலத்தில் சர்வதேச போட்டிகளை வேடிக்கை மட்டுமே பார்த்து வந்த நம் வீரர்கள்,
அரசின் முன்னெடுப்புகளால் சர்வதேச தேசிய போட்டிகளில் வெற்றி பெறும் வாய்ப்பை முதல்வர் ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.
5 வருடங்களில் 650 கோடியை விளையாட்டு மேம்பாட்டிற்காக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது-
தமிழகம் எல்லா துறையிலும் நம்பர் 1 துறை போல் விளையாட்டு துறையும் விரைவில் நம்பர் ஒன்றாக மாறும் –
மகளிர் காவும் இளைஞர்களுக்காகவும் அதிக திட்டங்களை திராவிட மாடல அரசு செயல்படுத்தி வருகிறது
நான்கரை ஆண்டுகளில் விடியல் பயணம் திட்டத்தின் கீழ் பெண்கள் மாதாந்தோறும் 900 முதல் 1000 ரூபாய் வரை சேமித்து உள்ளனர்
காலை உணவு திட்டத்திற்கு தினம்தோறும் 20 லட்சம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர்
மகளிர் உரிமை திட்டத்திற்கு ஒவ்வொரு மாதமும் ஒரு கோடி 31 லட்சம் இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது
சமீபத்தில் இந்த திட்டத்தை முடக்க வேண்டும் என்று ஒரு சில கூட்டம் முயற்சி செய்தது அதை அறிந்த முதல்வர் ஐந்தாயிரம் ரூபாய் அறிவித்தார்
அதேபோல் இளைஞர்களை பாதுகாக்க தான் விளையாட்டு துறையை மேம்படுத்தி வருகிறோம்
ஒரு காலத்தில் தமிழக வீரர்கள் சர்வதேச போட்டியை வேடிக்கை தான் பார்த்து வந்தார். ஆனால் தற்போது நமது இளைஞர்கள் போட்டியில் கலந்து கொண்டு வெற்றியை பெறக்கூடிய அளவிற்கு விளையாட்டுத்துறை முன்னேறி உள்ளது
சர்வதேச அளவில் இந்திய அளவிலும் விளையாட்டில் முதலிடம் வரும் வீரர்களுக்கு மூன்று சதவீத வேலை வாய்ப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது
இதுவரை 120 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு சில தினங்களில் 150 விளையாட்டுக்கள் வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட உள்ளது
தமிழில் முழுவதும் இந்த ஆட்சியில் 140 விளையாட்டு ஸ்டேடியங்கள் அமைக்கப்பட்டுள்ளது
கடந்த அதிமுக ஆட்சியில் 10 வருடங்களுக்கு 350 கோடி தான் விளையாட்டு துறைக்கு ஒதுக்கப்பட்டு வந்தது

ஆனால் நமது ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 600 கோடி ரூபாய் மதிப்பில் விளையாட்டு மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்தவர்கள்
இந்தியாவிலேயே மற்ற துறைகளில் தமிழகம் எப்படி முதலிடத்தில் உள்ளதோ அதேபோன்று விரைவில் விளையாட்டு துறையும் இந்தியாவின் முதல் இடத்தை பிடிக்கும்.
உங்களுடைய ஆதரவு எங்களுக்கு தேவை இளைஞர்களும் பெண்களும் விளையாட்டு வீரர்களும் இந்த அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்






