• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இந்தப் படத்தை வாங்க மாட்டேன் உதயநிதி ஸ்டாலின்

“Srinivasaa Silver Screen பேனர் சார்பில் தயாரிப்பாளர் ஸ்ரீநிவாசா சிட்தூரி தயாரித்துள்ள படம் ‘தி வாரியர்’.இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடித்துள்ளார். கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் பிரபலமான ஆதி பினிஷெட்டி. இந்தப் படத்தில் வில்லனாகவும், தென்னிந்தியாவின் வளர்ந்து வரும் இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி படத்தில் கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சிறப்புப் பாடலான ‘புல்லட்’ என்ற பாடலை தமிழ் சினிமா முன்ணனி நடிகரான சிலம்பரசன்பாடியுள்ளார். இந்த பாடல் படத்தின் முக்கியமான ஒன்றாக இருக்கும்நேற்று மாலை வேளச்சேரி பீனீக்ஸ் மால் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகரும், தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு அந்த பாடலை வெளியிட்டார்.
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, “ஒரு படத்தில் லிரிக் வீடியோ வெளியீடு இவ்வளவு பெரிதாக நடந்து நான் பார்த்ததில்லை. இத்தனை பெரிய விழா படத்தின் வெற்றியை இப்போதே உறுதி செய்துவிட்டது.
இந்த ‘வாரியர்’ என்னும் தலைப்பு இயக்குநர் லிங்குசாமியின் குணத்திற்கு மிகவும் பொருந்தும். கோவிட் காலத்தில் யாரும் வெளியே வரவே பயந்த நேரத்தில், வெளியே வந்து அவரது சொந்த முயற்சியில் பல உதவிகளைச் செய்தார். அவர் மிக நல்ல மனிதர். அவரும் நானும் 10 ஆண்டுகள் முன்பாக சேர்ந்து படம் செய்வதாக இருந்தோம். விரைவில் ரெட் ஜெயண்டில் நாம் படம் செய்யலாம் சார். நடிகர் ராமை பார்த்த சிறிது நேரத்தில் இருவரும் நண்பர்களாகிவிட்டோம். அவர் நன்றாக தமிழ் பேசுகிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள், கீர்த்தி அழகாக இருக்கிறார். படம் போட்டு காட்டுங்கள் என்றேன். “படத்தை வாங்கிங்குங்க..” என்றார்கள். “இப்பவே என்னை திட்டுகிறார்கள்.. இந்தப் படத்தை வாங்க மாட்டேன்…” என்றேன். பாடல் மிக நன்றாக இருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்..” என்றார்.