• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக யு.யு.லலித் இன்று பதவியேற்பு!!

Byகாயத்ரி

Aug 27, 2022

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த என்வி ரமணா பணி ஓய்வு பெற்றதை அடுத்து யு.யு.லலித் இன்று பதவியேற்கிறார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற என்.வி.ரமணா நேற்றுடன் ஓய்வு பெற்றார். என்.வி.ரமணா ஓய்வு பெறுவதையொட்டி நேற்று உச்சநீதிமன்றத்தில் அவர் விசாரிக்கும் வழக்குகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்தார். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் 49-ஆவது தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள உதய் உமேஷ் லலித் இன்று பதவியேற்று கொள்கிறார். தலைமை நீதிபதிக்கு காலை 10.30 மணிக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 1957-ல் பிறந்த யு.யு.லலித் 1983-ல் வழக்கறிஞராக தனது பணியை தொடங்கினார்.நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட 2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ சார்பில் அரசு வழக்கறிஞராக செய்யப்பட்டவர். இந்த நிலையில், யு.யு.லலித் 74 நாட்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக பணியாற்றி நவம்பர் 8-ஆம் தேதி ஓய்வு பெற உள்ளார். வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பின் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்ட 2வது நபர் இவர் ஆவார்.