புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்கள் மற்றும் சிறுவர்களை கவரும் வகையில் சிலிண்டர் பாம்,கிட்டார் மத்தாப்பு, ட்ரோன் பட்டாசு, ஹெலிகாப்டர் பட்டாசு, என விதவிதமான புதிய ரக பட்டாசு வகைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்

தீபாவளி என்றாலே புத்தாடை, இனிப்பு பலகாரம், காரம்,மற்றும் தடபுடல் உணவு வகைகள் என ஆயிரம் இருந்தாலும் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுகள் தான்.
பட்டாசு இல்லை என்றால் தீபாவளியே இல்லை என்ற வகையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிய பட்டாசுகளை வாங்கி வெடித்து குடும்பத்துடன் தீபாவளியை கொண்டாடுவார்கள்.

அதுவும் தீபாவளிக்கும் முதல் நாள் வீட்டில் உள்ள சிறுவர்கள் கம்பி மத்தாப்புகள், கலர் மத்தாப்பு, சாட்டை வகைகள், புஸ்வானம், உள்ளிட்ட சிறிய பட்டாசுகளை வெடித்து ஆர்வமுடன் தீபாவளியை கொண்டாடுவார்கள்.
மேலும் சிறுவர்களையும் வாடிக்கையாளர்களையும் கவரும் வகையில் புதுச்சேரியில் உள்ள பட்டாசு விற்பனையாளர்கள் ஆண்டுதோறும் வகை வகையான பட்டாசுகளை அறிமுகம் செய்து விற்பனை செய்வது வழக்கம்,
அந்த வகையில் இந்த முறை புதுச்சேரியில் உள்ள பட்டாசு கடைகளில் ட்ரோன் பட்டாசு, ஹெலிகாப்டர் பட்டாசு, அம்பர்லா மத்தாப்பு, மற்றும் சிலிண்டர் பாம், போன்ற பல்வேறு வகையான பட்டாசுகளை இந்த இந்த ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அது மட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் பட்டாசு வாங்கினால் மிக்ஸி கிரைண்டர் என இலவச பொருட்களும் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பட்டாசு வாங்கினால் ஃப்ரிட்ஜ் வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களும் 10 ஆயிரத்துக்கு மேல் பட்டாசு வாங்கினால் டிவி உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்து பட்டாசு விற்பனையை செய்து வருகின்றனர்.

பட்டாசு கடைகளுக்கு படையெடுக்கும் ஏராளமான பொதுமக்கள் பட்டாசுகளை கண்டு ரசிப்பதுடன் வாங்கி வெடித்தும் வருகின்றனர்.
இது குறித்து பட்டாசு விற்பனையாளர்கள் கூறும் பொழுது…
ஆண்டுதோறும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் விதவிதமான பட்டாசுகள் விற்பனைக்கு வைப்பது வழக்கம் இந்த ஆண்டு புதிய ரக பட்டாசுகள் 10 வகைகளுக்கு மேல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன,அதுமட்டுமல்லாமல் வாடிக்கையாளர்களுக்கு பிரத்தியேகமாக பரிசு பொருட்களும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனை வாங்கி பயனடையுமாறு பொது மக்களை பட்டாசு விற்பனையாளர்கள் விற்பனை கேட்டுக்கொண்டனர்.