மேற்கு தாம்பரத்தில் தீபம் யோகாலயா கிட்ஸ் அகாடமி சார்பில் பதினோராவது உலக யோகா தினத்தை முன்னிட்டு இரண்டு உலக சாதனை படைக்கும் நிகழ்ச்சி தீபம் யோகாலயாவின் நிறுவனர் யோக ரத்னா தீபா தலைமையில், இந்தியன் யோகா அசோசியேஷன் செயலாளர் டாக்டர் இளங்கோவன் முன்னிலையில், நடைபெற்றது,

இதில் முதலாவதாக சிறுவர்கள் தங்களுக்கு விருப்பமுள்ள பல்வேறு வகையான யோகாசனங்களை 11 நிமிடம் தொடர்ந்து செய்து முதல் உலக சாதனையை நிகழ்த்தினார் அதனை தொடர்ந்து 11 பெண்கள் 11 நிமிடங்கள் 111( நூற்றிபதிநென்று) யோகாசனத்தை நிகழ்த்தி இரண்டாவது உலக சாதனையை நிகழ்த்தினார் இந்த இரண்டு உலக சாதனைகளும் அங்கீகரித்து நோவா வேர்ல்ட் ரெக்கார்ட் சார்பில் சான்றிதழ்களும் மற்றும் பதக்கங்களும் வழங்கி சிறப்பித்தனர்.

பின்னர் பேசிய தீபம் யோகாலயா கிட்ஸ் அகாடமியின் நிறுவனர் தீபா பேசுகையில் வாழ்க்கையில் யோகா மிகவும் அவசியமானது தினமும் யோகா செய்வதன் மூலம் உடல்நலம் மற்றும் மனம் நலம் அடையவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் ஆரோக்கியமாக இருக்கவும் உதவும் எனவும் தெரிவித்தார். குழந்தைகள் எந்த அளவுக்கு யோகா பயிற்சியில் ஈடுபடுகிறார்களோ அவர்களுக்கு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கவும் உதவும் எனவும் தெரிவித்தார்.