
தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு தாக்கப்பட்ட சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி.
கடந்த சில நாட்களுக்கு முன்பு காமநாயக்கன்பாளையம் பகுதியில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் நேச பிரபு மர்ம நபர்களால் அருவாள் கொண்டு தாக்கினர்.
இதனை அடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேச பிரபு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் குற்றவாளிகள் இரண்டு பேர் பிரவீன் மற்றும் சரவணன் ஆகியோரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் போலீசார் தற்போது சேர்த்துள்ளனர்.
