மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள வேப்பம்பட்டியைச் சேர்ந்தவர் செல்வபாண்டி, இந்திய இராணுவ வீரரான இவர் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்., இன்று இராணுவ வீரர் செல்வபாண்டியும் அவரது மைத்துனர் பேரையம்பட்டியைச் சேர்ந்த அருண்குமார் என்பவரும் மதுன்றுவிட்டு மீண்டும் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.,

உசிலம்பட்டி அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி அருகில் இவர்கள் வந்த இருசக்கர வாகனம் மீது செங்கல் ஏற்றி வந்த லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.,

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இராணுவ வீரர் செல்வபாண்டி மற்றும் அவரது மைத்துனர் அருண்குமார் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.,

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் உடல்களை மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.,




