தஞ்சையில் நடைபெற்ற என்ஐஏ அதிகாரிகள் சோதனையில், தடை செய்யப்பட்ட இயக்கத்தோடு தொடர்புடையதாகக் கூறி இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தஞ்சாவூர், மானாங்கோரை, சாலியமங்கலம் பகுதிகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். மேற்கண்ட சோதனையின் போது, தண்டனைக்குரிய குற்றங்களில் ஈடுபட சதி செய்ததாக கூறி அப்துல் ரஹ்மான், முஜிபுர் ரஹ்மான் ஆகிய இருவரை கைது செய்து சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.
மேலும், சோதனையின்போது சில பென்டிரைவ்கள், லேப்டாப் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தஞ்சையில் என்ஐஏ சோதனையில் இருவர் கைது
