கரூர் வெள்ளியனை பகுதியில் உள்ள ஏமூர் புதூரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமாக ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்வதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இன்று கரூர் மாவட்ட தனிப்படை உதவி ஆய்வாளர் சையது அலி தலைமையில் தனிப்படையினர் ஏமூர் புதூரில் உள்ள பழனிச்சாமி என்பவருக்கு சொந்தமான இடத்தை சோதனை செய்த போது அங்கு சுமார் 35 யூனிட் ஆற்று மணல் கொட்டி வைக்கப்பட்டிருந்தது.

மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட சதாசிவம், (வயது 38) தேவர் திடல், கலங்கல், சூலூர், கோயம்புத்தூர், லாரி உரிமையாளர் மற்றும் சூர்யா (வயது 34) நத்தமேடு, மூக்கனாங்குறிச்சி, கரூர் மாவட்டம் லாரி ஓட்டுநர் ஆகியோர்களை பிடித்து விசாரணை செய்ததில் சதாசிவம் என்பவர் பழனிச்சாமயின் இடத்தை வாடகைக்கு பிடித்து சட்ட விரோதமாக ஆற்று மணலை கடத்தி விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்தன் பேரில் பசுபதிபாளையம் வட்ட காவல் ஆய்வாளர், சதாசிவம் மற்றும் சூர்யா ஆகியோர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 35 யூனிட் ஆற்று மணலையும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 லாரிகள் மற்றும் Toyota Etios – என்ற காரையும் கைப்பற்றி வெள்ளியனை காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டனர். சதாசிவம் என்பவர் மீது ஏற்கனவே கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் சின்னதாரபுரம் காவல் நிலையங்களில் மணல் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது.

மணல் கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்த பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர் மற்றும் தனிப்படையினரை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா, அவர்கள் பாராட்டுகள் தெரிவித்தார்கள்.