சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த ஆளை உரிமையாளர் உள்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து இருவர் கைது செய்யப்பட்டன.
விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ளது கங்கரைக்கோட்டை கிராமம். இக்கிராமத்தில் பால்பாண்டியன் (45 ) என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலை விதிமுறை மீறலில் ஈடுபட்டதால் பட்டாசு உற்பத்தி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கங்கரகோட்டை கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் வருவாய்த்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, மூடப்பட்ட பட்டாசு ஆலையில் ஆட்கள் நடமாட்டம் இருப்பதை பார்த்து பட்டாசு ஆலையை சோதனை நடத்தினார். அப்போது பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பட்டாசு ஆலையின் மேலாளர் சிவகாசி தெய்வானை நகரை சேர்ந்த வேங்கையன் (31) மற்றும் உரிமையாளர் பால்பாண்டியன் மீது ஏழாயிரம்பண்ணை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஹரிராம் வழக்கு பதிவு செய்து வேங்கையனை கைது செய்தார். தலைமறைவான உரிமையாளர் பால்பாண்டியனை தேடி வருகின்றனர். மேலும் உற்பத்தி செய்யப்பட்ட கருந்திரி பத்து குரோஸ், பேன்சி ரக வெடிகள் 3 பண்டல்கள், மற்றும் மூலப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
சேர்வைக்காரன்பட்டி பகுதியில் சங்கரபாண்டியபுரம் கிராம நிர்வாக அலுவலர் சத்திய பாபு பட்டாசு ஆலையை ஆய்வு செய்தபோது சட்ட விரோதமாக மரத்தின் அடியில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தை பார்த்து உடனடியாக ஏழாயிரம்பண்ணை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் வெம்பக்கோட்டையை சேர்ந்த மல்லீஸ்வரி ( 40 ), தேவர் நகரை சேர்ந்த பீட்டர் ஜேம்ஸ் (41), ,கண்ணக்குடும்பன் பட்டியை சேர்ந்த அறிவழகன் (50) ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து பீட்டர் ஜேம்சை கைது செய்தனர். மேலும் 30 கிலோ சோல்சா வெடிகள் மற்றும் மூலப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.