விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தளவாய்புரத்தை சேர்ந்த மாரிமுத்து நேற்று பிற்பகல் 12.30 மணி அளவில் தனது மனைவி ஜோதி மீனா (வயது 40 ) உடன் இருசக்கர வாகனத்தில் இராஜபாளையம் வந்த கொண்டிருந்த பொழுது மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் இராஜபாளையம் அரசு மருத்துவமனை அருகே ராயகிரி பகுதியில் இருந்து வந்த தனியார் பேருந்து முன்னே சென்ற இருசக்கர வாகனம் மீது மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்து ஜோதி மீனா சம்பவ இடத்திலே உயிரிழந்தார். அவரது கணவர் மாரிமுத்து பலத்த காயத்துடன் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதேபோல் இராஜபாளையம் அருகே உள்ள சக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த பொன்வேல் மனைவி வேலுத்தாய் (வயது 42) சத்திரப்பட்டி சாலையில் ஸ்கூட்டரில் சென்ற பொழுது ஆண்டாள்புரம் அருகே தனியார் பேருந்து ஸ்கூட்டர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் வேலுத்தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து இராஜபாளையம் தெற்கு காவல் நிலை போலீசார் தனியார் பேருந்து ஓட்டுனர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இராஜபாளையம் பகுதியில் ஒரே நாளில் இரண்டு விபத்தில் இரண்டு பெண்கள் உயிரிழந்தனர். இந்த இரண்டு விபத்திற்கும் இராஜபாளையத்தைச் சேர்ந்த தனியார் பேருந்து காரணம் இரண்டு விபத்துக்கும் ஒரே கம்பெனி சேர்ந்த பேருந்து அதிவேகமாக சென்று விபத்துக்குள்ளாகியது. இராஜபாளையம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
