• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சில நெடிகளில் தகர்ந்த இரட்டை கோபுரங்கள் – வைரல் வீடியோ!

ByA.Tamilselvan

Aug 28, 2022

டெல்லி அருகே சட்ட வீரோதமாக கட்டப்பட்ட இரட்டை கோபுரம் சில நொடிகளில் தகர்க்கப்பட்டது.
டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் பிரமாண்டமான இரட்டை கோபுர அடுக்குமாடி கட்டிடம் கட்டப்படது. இதில் அபெக்ஸ் என்ற கட்டிடம் 328 அடி உயரத்தில் 32 மாடிகளுடனும், மற்றொரு கட்டிடமான சியான் 318 அடி உயரத்துடன் 29 மாடிகளுடனும் கட்டப்பட்டது. ரூ.1200 கோடி மதிப்பிலான இந்த கட்டிடங்கள் சட்ட விரோதமாக கட்டப்பட்டதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் இரட்டை கோபுர கட்டடத்தை இடிக்க உத்தரவிட்டனர்.
பிரமாண்டமாக இரட்டை கோபுர கட்டிடங்களை இடிக்க 3 ஆயிரத்து 700 கிலோ வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில், நீர்வீழ்ச்சி என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த இரட்டை மாடி கட்டடம் தகர்க்கப்பட்டது. டெல்லி அருகே நொய்டாவில் இரட்டைக் கட்டங்கள் தகர்க்கப்பட்டதால் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.