• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நிக்கி கல்ராணிக்கு டும்..டும்..டும்.. மாப்பிள்ளை இந்த ஹீரோவா?

தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷிற்கு ஜோடியாக டார்லிங் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி.

இந்த படத்தை தொடர்ந்து யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா, மரகத நாணயம், ராஜவம்சம் உள்ளிட்ட பல படங்களில் நிக்கி நடித்துள்ளார். இதனையடுத்து தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி பிரபல நடிகர் ஆதியை திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ஆதி தமிழ் சினிமாவில் ‘மிருகம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். அதனை தொடர்ந்து சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்திருந்தார். தற்போது தமிழ்,தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒன்று ‘சிவுடு’. இப்படத்தை இயக்குநர் சுசீந்திரன் இயக்குகிறார். இந்த படத்தில் ஆதிக்கு ஜோடியாக நடிகை நிக்கி கல்ராணி நடிக்கிறார். இதற்கு முன்பு முன்னதாக, யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் உள்ளிட்ட படங்களில் நிக்கி கல்ராணி ஆதிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இருவரும் தற்போது காதலித்து வருவதாக நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. ஆனால் அதை அவர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. ஆதி வீட்டில் நடந்த அவரது தந்தையின் பிறந்த நாள் விழாவில் நிக்கி கல்ராணி பங்கேற்ற புகைப்படங்கள் வைரல் ஆன நிலையில் இப்படி ஒரு செய்தி பரவியது.

இதனையடுத்து தற்போது சமூக வலைதளத்தில் நடிகர் ஆதியும் நடிகை நிக்கி கல்ராணியும் இந்த ஆண்டு திருமணம் செய்துகொள்ளவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. இது குறித்து இருவருமே தற்போது வரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.