

கிராமத்து இளைஞன் குணா (சித்தார்த்). வாழ்க்கையில் எப்படியாவது பணக்காரன் ஆகிவிடவேண்டும் என்று தன் தாயிடம் சபதம் ஏற்று சென்னைக்கு வருகிறார். சினிமா, பார், ஜிம் என சின்ன சின்ன வேலைகள் செய்யும் அவருக்கு எல்லா இடங்களிலும் சுயமரியாதைக்கு இழுக்கு ஏற்படுவதால் அவரால் எந்த வேலையிலும் நீடிக்க முடிவதில்லை. ஒருவழியாக சீன கேங்ஸ்டர் ஒருவரின் சொகுசு கார் டாக்ஸி கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து பென்ஸ் கார் ஓட்டுகிறார்.
மற்றொரரு பக்கம், பெண்களை கடத்தி அவர்களின் பெற்றோரிடம் பேரம் பேசும் வில்லன் ராஸ் (அபிமன்யு சிங்). பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்று நம்பும் கோடீஸ்வர ஹீரோயின் லக்கியை (திவ்யான்ஷா கவுசிக்) வில்லன் குரூப் கடத்த முயலும்போது யதேச்சையாக சந்திக்கிறார் ஹீரோ. இவர்கள் அனைவரின் வாழ்க்கையில் அதன் பிறகு சில திருப்பங்கள் நிகழ்கின்றன. இறுதியில் ஹீரோவின் லட்சியம் நிறைவேறியதா என்பதே ‘டக்கர்’ சொல்லும் கதை.
படம் எதை நோக்கி நகரப் போகிறது என்பதற்காக ஆரம்பத்தில் இயக்குநர்அமைத்த அடித்தளம் அடுத்தடுத்த காட்சிகளில் ஆட்டம் கண்டுவிடுகிறது. அதன்பிறகு ஹீரோவின் நண்பராக வரும் விக்னேஷ் காந்த், யோகிபாபு, சீன கேங்ஸ்டர், பெண்களை கடத்தும் வில்லன் என திக்கு தெரியாமல் முட்டி மோதும் திரைக்கதையால் படத்தின் ஒரு காட்சி கூட மனதில் பதியவும், பாதிக்கவும் முடியாமல் அடம்புடிக்கிறது.
பணம் மட்டுமே வாழ்க்கை,பணம் மட்டுமே வாழ்க்கை இல்லை என்கிற எதிரெதிர் மனநிலையுடன் வாழும் இருவர் சந்திக்கும்போது என்ன நடக்கும் என்ற சுவாரஸ்யமான ஒன்லைனை எடுத்துக் கொண்ட இயக்குநர், அதை திரையில் சுவாரஸ்யமாக படமாக பதிவு செய்யவில்லை என்றே சொல்லவேண்டும். படத்தின் பிரதான கதையே கிட்டத்தட்ட இடைவேளைக்குப் பிறகுதான் தொடங்குகிறது. ஒரு காட்சியில் ஆக்ஷன் ஜானராக தோன்றும் படம், மற்றொரு காட்சியில் காமெடி படமாக மாறுகிறது. உடனடியாக அதற்கு அடுத்தக் காட்சியில் ரொமான்டிக் படமாக பரிணாமம் அடைகிறது. இப்படி மாறிக்கொண்டே இருப்பதால் பார்க்கும் நமக்கு படத்தின் கதாபாத்திரங்களோடு எந்தவித ஒட்டுதலும் ஏற்படவில்லை.
சாக்லேட் பாயாக வலம்வந்து கொண்டிருந்த சித்தார்த் இந்தப் படத்தில் ‘ரக்கட்’ பாயாக ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். நடிப்பை வெளிப்படுத்த பெரிய வாய்ப்பில்லை என்றாலும் தன்னால் முடிந்தவரையில் படத்தை ஒற்றை ஆளாக தாங்குகிறார்.
நாயகி திவ்யான்ஷா படம் முழுக்க கவர்ச்சி கலந்த அழகுப் பதுமையாக வந்து செல்கிறார். நடிப்பு சுத்தமாக வரவில்லை. ஆர்.ஜே.விக்னேஷ் காந்த், யோகிபாபு இருவரும் ஆடியன்ஸுக்கு சிரிப்பே வந்துவிடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு காமெடி செய்திருக்கிறார்கள். தியேட்டரில் கப்சிப். இரண்டாம் பாதியில் முனீஸ்காந்த் வரும் காட்சிகள் மட்டுமே சற்று சிரிப்பை வரவழைக்கின்றன. மோசமாக எழுதபட்ட வில்லன் கதாபாத்திரத்தில் அபிமன்யு சிங் வீணடிக்கப்பட்டிருக்கிறார்.
நிவாஸ் கே.பிரசன்னா இசையில் கொரோனா காலக்கட்டத்தில் ஹிட்டடித்த ‘நிரா நிரா’ பாடல் மட்டுமே கேட்கும்படி இருக்கிறது. மற்ற பாடல்கள் காட்சி வழியாகவும், செவி வழியாகவும் ஈர்க்க தவறுகின்றன. பின்னணி இசையும் படத்தை தூக்கி நிறுத்த உதவவில்லை. படத்தின் சேஸிங் காட்சிகளில் கேமராதான் முன்னும் பின்னும் ஆடுகிறதே தவிர பார்க்கும் நமக்கு ஒரு சின்ன சலனம் கூட இல்லை. மாறாக குழப்பமே மேலிடுகிறது.
ஒரு சுவாரஸ்யமான ஒன்லைனை எடுத்துக்கொண்டு அதற்கான திரைக்கதையில் மெனக்கெடாமல் பலவீனமான காட்சிகளால் எடுக்கப்பட்ட டக்கர் படம் பார்க்க வரும் பார்வையாளனை டக்கராக பழிவாங்குகிறது
- கடலில் மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து மீனவர்களுக்கு விபத்து..,குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க சென்ற போது படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி … Read more
- ஒன்றிய, கர்நாடகா அரசுகளை கண்டித்து, நாம் தமிழர் ஆர்ப்பாட்டம்…குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்.நாம் தமிழர் கட்சியின் சார்பில், தமிழகத்திற்கு உச்ச நீதிமன்றம் அனுமதித்துள்ள … Read more
- நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்பு மாபெரும் ஆர்ப்பாட்டம்…மதுரையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவிரி உரிமை மீட்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை … Read more
- பொது அறிவு வினா விடைகள்
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் பாடலிபுரம் என்னும் ஒரு பட்டினம். அதை சுதர்சனன் என்னும் அரசன் ஆண்டுவந்தான்.அந்த அரசன் சகல … Read more
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 261: அருளிலர் வாழி தோழி! மின்னு வசிபுஇருள் தூங்கு விசும்பின் அதிரும் ஏறொடுவெஞ் … Read more
- குறள் 538:புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். பொருள் (மு.வ): சான்றோர் புகழ்ந்து சொல்லியச் … Read more
- பிஜேபியுடன் கூட்டணி முறிவு… அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இனிப்பு ஊட்டி மகிழ்சசியை வெளிப்படுத்திய இஸ்லாமியர்கள்..,பி.ஜே.பியுடன் கூட்டணி முறித்துக் கொண்டதற்காக சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு இஸ்லாமியர்கள் இனிப்பு ஊட்டி … Read more
- வாடிப்பட்டி அருகே மத்திய சிறை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மறியல்..!மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேட்டுப்பட்டி கிராமத்தில் சுமார் 40 ஆண்டுகளாக சிறுமலை அடிவாரத்தில் உள்ள … Read more
- கழிவுநீரை அகற்ற லஞ்சம் கேட்ட மாநகரட்சி அதிகாரி கைது..!தொடர்ந்து இதுகுறித்து பொன்னகரம் வார்டு மாநகராட்சி அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் உதவி பொறியாளர் விஜயகுமார் கணேசன் … Read more
- சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 30, 1985)…சார்லஸ் பிரான்சிஸ் ரிக்டர் (Charles Francis Richter) ஏப்ரல் 26, 1900ல் அமெரிக்காவில் ஓகியோ மாவட்டத்தில் … Read more
- குளச்சல் படகு மூழ்கி மூன்று குமரி மீனவர்கள் மாயம்..!மீனவர்கள் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு ஆள் கடல் பகுதியில் 29. 9. 2023 அன்று மீன் … Read more
- விழுப்புரத்தில் மகளிர் சுயஉதவிக்குழு உற்பத்தி பொருள் கண்காட்சி..!விழுப்புரத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவின் உற்பத்திப் பொருள் கண்காட்சி நடைபெற்று வருகிறதுவிழுப்புரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி … Read more
- அக்.1 முதல் விருதுநகர் – தென்காசி இடையே மின்சார ரயிலில் பயணிக்கலாம்..!
- தொடர் விடுமுறையால் திருப்பதியில் அலைமோதிய கூட்டம்..!தொடர் விடுமுறை மற்றும் புரட்டாசி 2வது சனிக்கிழமையையொட்டி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கூட்டம் அலைமோதுகிறது.இதனால் வைகுந்தம் … Read more
