தேனி நாடாளுமன்ற தொகுதியில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டிடிவி தினகரன் அவர்களுக்கு வாக்குகள் கேட்டு அவரது மனைவி அனுராதா தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்கரை மன்னாடிமங்கலம், காடுபட்டி, நாராயணபுரம், கச்சிராயிருப்பு, மேலக்கால், திருவேடகம் ஆகிய பகுதிகளில் குக்கர் சின்னத்துக்கு வாக்குகள் கேட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
இதில், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் ராஜன் தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் கிளைச் செயலாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.