• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சோழவந்தானில் டிடிவி தினகரன் மனைவி அனுராதா பிரச்சாரம்: உற்சாக வரவேற்பு

ByN.Ravi

Apr 10, 2024

தேனி நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்,
போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் டிடிவி தினகரனுக்கு வாக்குகள் கேட்டு அவரது மனைவி அனுராதா சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் அருகில் பிரச்சாரத்திற்கு வந்த டிடிவி தினகரன் மனைவி அனுராதாவிற்கு, மருது பெட்ரோல் பங்கில் பாஜக விவசாய அணி மாநிலத் தலைவர் எம். வி. எம். மணி முத்தையா தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், வார்டு கவுன்சிலர் வள்ளி மயில், லிங்கம் சிவகாமி மற்றும் பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.