• Tue. Oct 7th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் எம்பிக்களை பெற முயற்சி – டாக்டர் சரவணன்

Byகுமார்

Apr 18, 2022

மதுரை பீபீ குளம் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில், பாஜக நிறுவப்பட்ட நாளையொட்டி சிறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாஜக மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில், “2 வருடங்களுக்கு பிறகு மக்கள் எதிர்ப்பார்ப்புடன் சித்திரை திருவிழா நடைபெற்றது. இந்தாண்டு இந்து மதத்திற்கு எதிராக போலி மதசார்பின்மை பேசும் திமுக இந்த விழாவை நடத்தியது. இந்தாண்டு சித்திரை திருவிழாவிற்கு 3 மடங்கு மக்கள் அதிகமாக வந்தனர். வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் போது 2 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். காவல்துறை இந்த விழாவை சரியாக கையாளவில்லை. ஒரு காவல்துறையினரை கூட பாதுகாப்புக்கு காணவில்லை. 60 மண்டகப்படிகளுக்கு மேல் கள்ளழகர் செல்லாததால் அங்கிருந்த பக்தர்கள் சாமியை தரிசிக்க பொதுவெளியில் கூடியதால் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரணம் முக்கியமில்லை. ஏன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் செய்யவில்லை.

வைகை ஆற்றுக்குள் இந்து சமய அறநிலையத்துறை மண்டகப்படி என வைக்காமல் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மண்டகப்படி என வைத்து மரபுகள் மீறப்பட்டுவிட்டன. அதனால்
தான் இந்த இன்னல்கள் ஏற்பட்டுள்ளது. திமுக ஸ்டென்ட் அரசியல் செய்கின்றனர். பழங்குடி மக்களை சென்று பார்ப்பது, ஆம்புலன்ஸ்க்கு வழிவிடுவது போன்ற விளம்பரத்தை மட்டுமே தேடுகின்றனர். மதுரை மேயர் இதுவரை கண்ணில் படவில்லை. மதுரை மேயருக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும். மதுரையில் முடங்கி கிடக்கும் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.உள்ளாட்சி தேர்தலில் வார்டுக்கு 50 லட்சம் கொடுத்து சமாளித்துவிட்டனர். பணமழையை பொழிய வைத்து மக்கள் மனதை மாற்றி விட்டனர். 2024 அல்லது 2026 ல் ஒரே நாடு ஒரே தேர்தல் வரும் அப்போது தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும். சட்டமன்றத்தில் 150 இடங்களிலும், நாடாளுமன்றத்தில் 25 எம்பிக்களை பெற முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது’ என்றார்..