• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற திருச்சி எம்பி..,

ByS. SRIDHAR

Apr 29, 2025

புதுக்கோட்டை பழைய நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கிளை அலுவலகத்தில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகுட்பட்ட, மாநகராட்சி மற்றும் புதுக்கோட்டை ஒன்றியத்துக்கு ட்பட்ட பகுதி மற்றும் கரம்பக்குடி ஒன்றியத்துக்கு ட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெரும் சிறப்பு முகாமினை மதிமுக மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி ஏற்பாடு செய்திருந்தார்.

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அலுவலகத்தில் அமர்ந்து பொதுமக்கள் கொண்டு வந்த கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மற்றும் துணை மேயர் லியாக்கத் அலி ஆகியோர் எம்பிஐ நேரில் சந்தித்து மாநகராட்சிக்கு 12.000 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் டேங்கர் லாரி மற்றும் மினிஹிட்டாச்சி இரண்டு வழங்க மனு அளித்தனர்.

பொதுமக்களிடம் பெற்றுக் கொண்ட கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களிடம்அலைபேசியில் நாடாளுமன்ற உறுப்பினர் பேசி உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.