• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஓபிஎஸ் சார்பில் நடைபெறம் திருச்சி மாநாடுக்கு பந்தக்கால் நடப்பட்டது..!!

ByA.Tamilselvan

Apr 21, 2023

ஓபிஎஸ் சார்பில் நடைபெறம் திருச்சி மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது
வரும் 24-ம் தேதி திருச்சியில் ஓ. பன்னீர் செல்வம் தரப்பு சார்பில் முப்பெரும் விழா மாநாடு நடைபெற உள்ளது. மாலை 5 மணிக்கு தொடங்கும் மாநாடு இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது. இந்த மாநாடு தொடர்பாக கடந்த 10-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து திருச்சி பொன்மலையில் உள்ள ஜி கார்னர் மைதானத்தில் மாநாடு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் வெல்லமண்டி நடராஜன், கு.ப. கிருஷ்ணன் உள்ளிட்ட ஓ. பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.