மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா- வின் 9 ஆண்டு நினைவு தினத்தையொட்டி மாவட்ட செயலாளர் இளம்பை.இரா.தமிழ்ச்செல்வன் தலைமையில்
பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி நினைவு அஞ்சலி செலுத்திய பின்னர் அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் நகர செயலாளர் பூபதி, ஒன்றிய செயலாளர் செல்வகுமார், ரவிச்சந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாசி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பூவை.செழியன், மாவட்ட நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் உள்ளிட்ட தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர் .






