• Thu. Jan 22nd, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மதுரையில் வ உ சி யின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Byகுமார்

Sep 5, 2022

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்தநாள்: மதுரையில் வ உ சி யின் திருவுருவ சிலைக்கு அரசியல் கட்சியினர் சமுதாய அமைப்பினர் மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 151 வது பிறந்தநாள் விழாவினை தமிழக அரசும், அனைத்து கட்சியினரும் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள வ உ சி யின் திருவுருவ சிலைக்கு ஏராளமான அரசியல் கட்சியினர் சமுதாய அமைப்பினர்வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாநிலத் தலைவர் அண்ணா சரவணன்இளைஞர் அணி தலைவர் ராஜாஇளைஞர் அணி செயலாளர் பந்தல் ராஜா மதுரை மாவட்ட தலைவர் புல்லட் ராம்குமார் துணைத் தலைவர் ஒத்தக்கடை பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள்கரிமேடு பகுதியில் இருந்து முளைப்பாரி எடுத்தும் பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்அதனைத் தொடர்ந்து மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பாக மாநில இளைஞரணி துணை தலைவர் செந்தில்ராஜ்தேவர் புறநகர் மாவட்ட செயலாளர் குட்டி என்ற ஞானசீலன் உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்தனர் வேளீர் மக்கள் கட்சியின் சார்பில்திமுக திமுக வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ஜெய பிரபா மற்றும் வேளீர் மக்கள் கட்சி நிறுவனர் முனைவர் பாலசுப்பிரமணியம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அதனைத் தொடர்ந்து அதிமுக ஓபிஎஸ் அணியின் சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் அதனைத் தொடர்ந்து தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன்ஜி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதனைத் தொடர்ந்து தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் மாவட்ட தலைவர் கணேசன் முன்னாள் மாமன்ற உறுப்பினர் ராஜமாணிக்கம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அதனை தொடர்ந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் செல்ல பாண்டியன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இதனைத் தொடர்ந்து பல்வேறு அமைப்பினார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.