• Sun. Mar 22nd, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

காளவாசலில் தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில்.., மறைந்த நடிகர் விஜயகாந்த்துக்கு அஞ்சலி..!

ByKalamegam Viswanathan

Dec 28, 2023

மதுரை மாவட்டம், காளவாசலில் நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு, தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்”அஞ்சலி” தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் சார்பில், காளவாசலில் உள்ள அலுவலகத்தில் பொதுச் செயலாளர் சினி வினோத் தலைமையில், தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவரும், தேமுதிக கட்சி தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வில் விருமன் கவிஞர் கருமாத்தூர் மணிமாறன், காசி மாயன், விஜய் டிவி கதாநாயகி சோ அட்சயா, செம்மீன் திரைப்படம் நடிகர் வெட்டுக்குமார், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், சங்க மேலாளர் பாலா, வீரா, அப்பா பாலாஜி, பறவைமணி, பழனிவேல் கருங்காலக்குடி சந்துரு, ராணி மற்றும் பலர் கலந்து கொண்டனர். மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செய்தனர்.