• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

Byகாயத்ரி

Dec 24, 2021

தந்தை பெரியாரின் 48வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பெரியாரின் 48வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அரசியல் கட்சி தலைவர்கள், பெரியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, எ.வ.வேலு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, முரசொலி மாறன் உள்ளிட்டோரும் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

இதனை தொடர்ந்து திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி, தந்தை பெரியாரின் உருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதேபோல் பெரியாரின் சொந்த ஊரான ஈரோட்டில் உள்ள அவரது சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பன்னீர் செல்வம் பூங்காவில் உள்ள பெரியாரின் உருவ சிலைக்கு திமுக துணை பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் தலைமையிலான நிர்வாகிகள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

இதேபோல் திராவிடர் கழகம் மற்றும் பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினர்.