• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பழங்குடியின மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByG. Anbalagan

Apr 28, 2025

முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சட்டவிரோதமாக வெளியேற்ற பழங்குடி மக்களுக்கு நீதி வழங்க கோரியும், பண மோசடி, நில மோசடி செய்த வனத்துறையினர் உள்ளிட்டவர்களை கைது செய்ய கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பழங்குடியின மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் …

நீலகிரி மாவட்டத்தில் தோடர், குறும்பர், இருளர், காட்டுநாயக்கர், பனியர் உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து சட்ட விரோதமாக வெளியேற்றப்பட்ட புளியாளம், மண்டக்கரை, நாகம்பள்ளி, நெல்லிக்கரை, குண்டித்தால், பென்னை, முதுகுளி கிராமங்களை சார்ந்த காட்டுநாயக்கன், பனியன், முள்ளு குறும்பர், பெட்டக்குறும்பர், இருளர் ஆகிய மக்களுக்கு நீதி வழங்க வேண்டும், புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொகையில் முறைப்பீடு செய்த வனச்சரகர், வழக்கறிஞர், நில புரோக்கர்கள் மீது ஐந்து ஆண்டுகளாக மாவட்ட நீதிமன்றத்தில் நிலவையில் உள்ள வழக்கினை விரைவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மோசடியில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும், புலிகள் காப்பகத்திற்குள் வாழ்ந்து வருபவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றக்கூடாது, புலிகள் காப்பகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் இழப்பீடு தொகை வழங்கிட வேண்டும், இழப்பீட்டுத் தொகையை 25 லட்சமாக உயர்த்தி தரவேண்டும்.

மத்திய அரசு வழங்கும் வன உரிமைகளுக்கான இழப்பீடுடன் தமிழக அரசு வழங்கும் கூடுதல் இழப்பீடான 10 லட்சம் வழங்கி இடம்பெயர்ந்தவர்கள் விரும்பும் நிலம் குடிநீர் சாலை வசதி குழந்தைகள் சத்துணவு மையம் ஆகியவை ஏற்பாடு செய்து தர வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று உதகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் நீலகிரி மாவட்ட குழு சார்பில் பழங்குடியின மக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.