கைலாசபட்டி கைலாசநாதர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் முன்னிலையில் மூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி மலை மேல் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது.
கோவிலில் மகா கும்பாபிஷேக விழா 2012 ஆம் ஆண்டு மிக விமர்சையாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு கைலாசநாதர் கோவிலில் மகா கும்பாபிஷேக விழா வருகின்ற 29ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனால் கோவில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று கைலாசநாதர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் மற்றும் மூர்த்த கம்பத்துக்கு நவதானியங்கள் கட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்நிலையில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் கோவில் வளாகத்தில் முகூர்த்தக்கால் கம்பத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்து முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த பூஜையில் பெரியகுளம் மற்றும் அதை சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.