• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மீனவர்கள் படகில், இழுவை கப்பல் மோதி விபத்து…

குமரி மாவட்டம் தூத்தூர் பகுதியை சேர்ந்த பைஜூ என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 12 மீனவர்கள்.தேங்காபட்டணம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.கடந்த 40_நாட்களாக ஆழ் கடலில் தங்கி மீன் பிடித்த மீனவர்கள் கரை திரும்பிக்கொண்டிருந்த நிலையில் விசைப்படகு பயணித்த கடல் பரப்பில் தூத்துக்குடியில் இருந்து வந்த இழுவை கப்பல் விசைப்படகின் மீது மோதிதி விபத்து ஏற்படுத்திய நிலையில் நிற்காமல் சென்று விட்டது.

கப்பல் மோதிய வேகத்தில் விசைப்படகு துண்டு,துண்டாக உடைந்து கடலில் மூழ்கியது.அதில் இருந்த மீன்களும் கடல் பரப்பில் சிதறிய நிலையில்.படகில் இருந்த மீனவர்களும் கடலில் தூக்கி வீசப்பட்ட நிலையில், பலருக்கும் உடலில் காயங்கள் ஏற்பட்ட நிலையிலும், உயிர் பிழைக்க கடலில் நீந்திக் கொண்டிருந்த நிலையில் அந்த வழியாக வந்த மாலத்தீவின் கடற் படை கப்பல் குமரி மீனவர்கள் 12_பேரையும் மீட்டு, மாலத்தீவில் உள்ள ஒரு தீவில் தக்கவைக்கப் பட்டுள்ள நிலையில், குமரி மீனவர்கள் பயணித்த படகு விபத்தில் சிக்கிய நிலையில்.மாலத்தீவு கடற் படையால் காப்பாற்றப்பட்டு ஒரு தீவில் இருக்கும் தகவல் படகின் உரிமையாளர் பைஜூ வுக்கு வந்த நிலையில், தெற்காசிய மீனவ தோழமை அமைப்பின் இந்திய செயலாளர் அருட்பணி சர்ச்சில் தலைமையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், படகின் உரிமையாளர் அருட் பணி சர்ச்சில் தலைமையில் ஆட்சியர் ஸ்ரீதர் இடம் தங்கள் குடும்ப தலைவர்களை பாதுகாப்பாக மீட்டு வருவதுடன், இழப்பீடு கிடைக்கும் வகையில் உதவி தொகை கிடைக்கவும் உதவி செய்ய வேண்டும் என மனு கொடுத்துள்ளனர்.