• Wed. Mar 18th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

திருமணம் முடிந்த கையோடு கல்லறைக்கு பயணம்…

Byமதி

Dec 17, 2021

திருமணமான உடனேயே ஒரு ஜோடி தேனிலவுக்குப் பதிலாக கல்லறையை சென்றால் எப்படி இருக்கும்..? அப்படிப்பட்ட ஒரு ஜோடியின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொரோனாவால் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை இவர்கள் ஜோடியாக சேர்ந்து மயானத்தில் செய்து வருகின்றனர்.

மலேசியாவை சேர்ந்த 34 வயதான முஹம்மது ரிட்ஜீவன் ஒஸ்மான் மற்றும் அவரது மனைவி நூர் அஃபிஃபா ஹபீப்(26), டிசம்பர் 13 அன்று திருமணம் செய்து கொண்டனர்.

மணமகன் ரிட்ஜீவன், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் காங்குல்-கி குழுவில் உறுப்பினராக உள்ளார். திருமணம் முடிந்த அடுத்த நாளே, கொரோனா நோயாளி இறந்த பிறகு, அவரது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்று குழுவிலிருந்து தனக்கு அழைப்பு வந்ததாக ரிட்ஜீவன் கூறினார்.

இதை அவர் தனது மனைவியிடம் கூற, அவரும் கணவருடன் செல்ல ஒப்புக்கொண்டார். தம்பதியினர் உடனடியாக கல்லறைக்குச் சென்றனர், அங்கு அவர்கள் கொரோனாவால் இறந்த நோயாளிகளின் உடல்களை தகனம் செய்தனர்.

திருமணத்திற்குப் பிறகு, தம்பதியினர் இதுவரை 15 உடல்களை எரித்துள்ளனர். திருமணமான முதல் வாரத்தில் கொரோனாவால் இறந்த நோயாளிகளின் இறுதிச் சடங்குகளை செய்ய முடிவு செய்த இந்த ஜோடியை மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.