• Sun. Mar 1st, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

புதிதாக அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி..!

Byவிஷா

Oct 27, 2021

தமிழகத்தில் புதிதாக அரசுப் பணியில் சேரும் ஊழியர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் ஊழியர்களுக்கு பணி தொடர்பான பயிற்சியை அந்தந்த மாவட்டங்களிலேயே நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதற்கு முன்னதாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து பவானிசாகர் பயிற்சி மையத்திற்கு சென்ற அரசு ஊழியர்கள் பயிற்சி பெற வேண்டிய சூழல் இருந்தது. இதனை தவிர்த்து தாமதம் ஆகாமல் புதிதாக அரசுப் பணியில் சேரும் ஊழியர்களுக்கு இனி சொந்த மாவட்டங்களிலேயே பயிற்சி வழங்கப்படுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.