• Sun. Aug 23rd, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

உசிலம்பட்டி பகுதிபொறியாளர்களுக்கு பயிற்சி..,

ByP.Thangapandi

Nov 8, 2023

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி கட்டிட பொறியாளர்கள் கூட்டமைப்பு சார்பில், நடைபெற்ற இளம் பொறியாளர்களுக்கு, தற்போது உள்ள முறைப்படி கணினி முறையில் கட்டிட வரைபட அனுமதி பெறுவது எப்படி என்றும் அதில் உள்ள உட்பிரிவு எவ்வாறு அனுமதி பெறுவது குறித்த பயிற்சி நடைபெற்றது.

இந்த பயிற்சியை தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் அறிவழகன் துவக்கி வைத்தார். உசிலம்பட்டி பொறியாளர் கூட்டமைப்பின் தலைவர் லெனின் சிவா, செயலாளர் அருண், பொருளாளர் விஸ்வநாத் முன்னிலை வகித்தனர், மதுரையைச் சேர்ந்த பொறியாளர் சண்முகப்பிரியா பயிற்சி அளித்தார். இந்த பயிற்சியில் நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கு மேற்பட்ட பொறியாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியை அனுஜ் டைல்ஸ் செந்தில்குமார் ஏற்பாடு செய்திருந்தார்.