• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் பயிற்சி பெற்ற.., 132 ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட நிகழ்ச்சி..!

குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், இன்று 132 இளம் ராணுவ வீரர்களுக்கு சத்தியபிரமாண நிகழ்ச்சியை எடுத்துக்கொண்டனர்.


குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியை பெறும் வீரர்கள், இந்தியாவின் எல்லை பகுதிகளில் பணிபுரிய அனுப்பி வைக்கப்படுபவர்கள்


46வாரங்கள் குன்னூர் வெலிங்டன் இராணுவ மையத்தில் பயிற்சி முடித்தப் பின்பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் 132 பேர், பயிற்சி முடித்து, ராணுவ வீரர்களாய் பணிபுரிய சத்தியப்பிரமாண நிகழ்ச்சி இன்று நடந்தது. பயிற்சிக்கு செல்லும் ராணுவ வீரர்கள், பகவத்கீதை, பைபிள், குரான் புத்தகங்கள் மற்றும் தேசிய கொடி மீது, உப்பு உட்கொண்டு சத்தியப்பிரமாணம் எடுத்து கொண்டனர்.

ராணுவ பேண்ட் இசைக்கேற்றவாறு ராணுவ வீரர்கள் கம்பீர அணிவகுப்பு பார்வையாளர்களை கவர்ந்தது. பயிற்சி வீரர்களின் கம்பீரமான அனுப்பி வகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட, பிரிகேடியர் இராஜேஸ்வர் சிங் வெலிங்டன் அவர்களால் 10 சிறந்த வீரர்கள் மற்றும் பயிற்சி அளித்த இராணுவ அதிகாரிகளுக்கு பதக்கங்கள் வழங்கி கவுரவித்தார்.

பயிற்சியை முடித்த 132 ராணுவ வீரர்கள் அவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பட்டாலியன்களுக்கு அனுப்பப்படுவர். இந்நிகழ்ச்சியில் உயர்ராணுவ அதிகாரிகள், இளநிலை அதிகாரிகள், ராணுவ வீரர்கள், பயிற்சி ஆசிரிpயர்கள் கலந்து கொண்டனர். கொரோனா தொற்று காரணமாக இளம் வீரர்களின் பெற்றோர்கள் அனுமதிக்கப்படவில்லை.