• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மொபைல் ரீசார்ஜ் செய்வதில் ட்ராய் அதிரடி உத்தரவு

Byவிஷா

Dec 24, 2024

இனி இன்டெர்நெட்டுக்கும் சேர்த்து ரீசார்ஜ் செய்ய வேண்டாம் என டிராய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது ஜியோ தொலைத்தொடர்பு நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு சந்தைக்கு வரும் முன்னர் வரையில், இந்திய தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன் ஆகிய நிறுவனங்கள் வாய்ஸ் காலுக்கு தனி ரீசார்ஜ், இன்டர்நெட்டிற்கு தனி ரீசார்ஜ், குறுஞ்செய்திகளுக்கு (எஸ்எம்எஸ்) தனி ரீசார்ஜ் ஆகியவை இருந்தன.
ஆனால், அதன் பிறகு சமீப ஆண்டுகளாகவே, அனைத்திற்கும் ஒரே ரீசார்ஜ் போல மாறிவிட்டது. டேட்டா, வாய்ஸ் கால் , குறுஞ்செய்தி ஆகியவை சேர்த்து தான் ரீசார்ஜ் செய்யும் நிலை உள்ளது. இதனால் இன்டர்நெட் உபயோகம் செய்யாத பயனர்கள் அதற்கும் சேர்த்து அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இதனை தடுக்கும் நோக்கில், இந்திய தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பான ட்ராய் , புதிய திருத்தத்தை அறிமுகம் செய்துள்ளது. அதாவது, இனி வாய்ஸ் காலுக்கு தனி ரீசார்ஜ், இன்டர்நெட்டிற்கு தனி ரீசார்ஜ் ஆகியவைக்கு தனி ரீசார்ஜ் அறிமுகம் செய்ய வேண்டும் என தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதாவது, இந்தியாவில் 30 கோடி பயனர்கள் 2ஜி உபயோகம் செய்பவர்களாகவும், பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயனர்கள் இன்டர்நெட் சேவை அதிகம் பயன்படுத்தாதவர்களாகவும், பலர் 2 சிம் உபயோகம் செய்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருமே வாய்ஸ் கால், குறுஞ்செய்தி, இன்டெர்நெட் என மூன்றும் சேர்த்து அதிக தொகைக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலையில் உள்ளனர். இதனை தடுக்கும் பொருட்டே ட்ராய் இந்த முறையை நடைமுறைக்கு கொண்டுவர உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 30 நாட்களுக்குள், இந்திய தொலைதொடர்பு நிறுவனங்கள் வாய்ஸ் கால், குறுஞ்செய்தி, இன்டர்நெட் என தனித்தனியாக மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை அறிமுகம் செய்ய வேண்டும் என்றும், அதிகபட்ச வேலிடிட்டி 365 நாட்கள் வரை நிர்ணயம் செய்து கொள்ளலாம் என்றும் ட்ராய் தெரிவித்துள்ளது.