
உளுந்தூர்பேட்டையில் இன்று அதிகாலை ஒரு வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலியாகி இருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உளுந்தூர்பேட்டை அருகே தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் மனநலம் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் அவரது இரண்டு மகள்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து அவர்களை காப்பாற்ற முயன்ற தாத்தாவும் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். மேலும் தீக்காயம் அடைந்த மூன்று பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
