• Sun. Dec 21st, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரையில் பிரதமர் வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

Byவிஷா

Feb 26, 2024

பிப்ரவரி 27, 28 தேதிகளில் பிரதமர் நரேந்திரமோடியின் வருகையை முன்னிட்டு, மதுரையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மதுரை மாநகர போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, திருச்சியில் இருந்து மதுரை வரும் வாகனங்கள் ஒத்தக்கடை வழியாக மாட்டுத்தாவணி செல்லலாம். திருச்சியில் இருந்து தூத்துக்குடி, விருதுநகர், நெல்லைக்கு வாகனங்கள் ஒத்தக்கடை வழியாக செல்லலாம். சிவகங்கையில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் பூவந்தி வழியாக அந்தந்த மாவட்டங்களைச் சென்றடையும். ராமநாதபுரத்தில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் சக்குடி பாலம் வழியாகச் சென்றடையும். தூத்துக்குடியில் இருந்து மதுரை, திருச்சி செல்லும் வாகனங்கள் ஏ.முக்குளம் சந்திப்பு வழியாக சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமரின் வருகையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் 10,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.