நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகா பகுதியில் அதிக அளவு குறும்பர். இருளர் காட்டுநாயக்கர் .பணியர். தோடர் .தொதவர்வர் என பல்வேறு இன மக்கள் இங்கு வாழ்ந்து வருகின்றனர்.

இந்த சமுதாயத்தின் மக்களினுடைய ஆண்டுதோறும் திருவிழா மிக விமர்சையாக நடத்துவது வழக்கம். இந்நிலையில் பந்தலூரை அடுத்துள்ள படையேறி என்கின்ற பகுதியில் பகவதி அம்மன் கோவில் வருடாந்திர திருவிழா மிக சிறப்பான முறையில் நடத்துவர் .
இந்நிலையில் சேரங்கோடு பகுதியில் இருக்கக்கூடிய படையேறி கிராமப் பகுதியில் அமைந்திருக்கக்கூடிய இந்த பகவதி அம்மன் கோவிலில் மூன்று நாட்கள் திருவிழாக்கள் நடந்து வரும் . நேற்றைய தினம் இரவு முழுவதும் அம்மனை தரிசிக்கும் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பல்வேறு பகுதியில் இருக்கக்கூடிய காட்டுநாயக்கர் பனியர் என்று சொல்லக்கூடிய இன மக்கள் ஒன்று சேர்ந்து இந்த திருவிழாவை நடத்துவார்கள். அன்றைய தினம் இரவு பெரியவர்களை. முதியவர் இளம் பெண்கள் இலைஞர்கள் என அனைவரும் அம்மன் கோயிலை ஆடிப்பாடி தங்கள் இசை கருவியை வாசித்து நடன நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.
அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் மாலை வேளையில் இவருடைய சிறப்பு பூஜை நிறைவுற்றது இதில் பல்வேறு இனத்தினுடைய பல்வேறு பகுதிகளுக்கு கூடிய நபர்கள் வந்து கலந்து கொண்டனர் ..இந்த பகவதி அம்மன் என்று சொல்லக்கூடிய இந்த கோவிலில் பகவதி அம்மன் அந்தப் பகுதியில் மூத்தவர்கள் அதாவது அக்கா என்று சொல்லக்கூடிய இந்த பகவதி அம்மன் கோவில் இதிலிருந்து ஏழு குடும்பமாக ஏழு கன்னிமார்களாக பிரிந்து உள்ளனர் அவர்கள் ஏலம்மன்னா. கொளப்பள்ளி அம்மன் காவு. பயிண்ட்கில் என்று சொல்லக்கூடிய பல்வேறு பகுதிகளில் இவர்கள் கோயில்களை வைத்து வழிபட்டு வருகின்றனர்.
இன்றைய தான் இந்த கோவிலில் சிறப்பு அம்சமாக நேந்துக்கக் கூடியவர்கள் தேங்காய்களை பூஜாரியுடன் கொடுத்து அதை உழைத்து அருள்வாக்கு தருவார் .அந்த அருள்வாக்கில் உடைக்கப்பட்ட தேங்காய் இரண்டும் தரையில் போடுவார் தேங்காய் வானத்தை நோக்கி இருக்க வேண்டும் அப்படி வானத்தை நோக்கி இல்லாமல் ஒரு தேங்காய் கவிழ்ந்தும் ஒரு தேங்காய் வானத்தைப் பார்த்து இருந்தால் அவர்களுக்கு சுபிட்சம் வாழ்க்கை நன்றாக உள்ளது என்பதை அவர்கள் குறி சொல்கிறார்கள் .இரண்டு தேங்காய்க்கலும் தரை மீது கவிழ்ந்து இருந்தால் அந்த தேங்காய் மூலம் அவளுக்கு என்ன கெடுதல் என்ன நேர்ந்து உள்ளது என்பதை அருள்வாக்கு மூலம் சொல்கின்றனர். .இந்த அருள்வாக்கு நம்பி அப்பகுதிக்க மக்கள் தேங்காய்களை மட்டும் கொடுத்து பூஜையில் அருள் பெற்று செல்கின்றனர் இது வழக்கமாக நடைபெற்று வருகிறது . இந்த அருள் வாக்கு மக்களுடைய பெரும் நம்பிக்கையாக இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.