• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வர்த்தகர்கள் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம்

ByP.Thangapandi

Nov 29, 2024

வணிக பயன்பாட்டில் உள்ள கடைகளுக்கு 18 சதவீதம் ஜீஎஸ்டி வரி விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உசிலம்பட்டியில் சுமார் 2000 ம் கடைகளை அடைத்து வர்த்தகர்கள் சங்கத்தினர் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மத்திய மாநில அரசுகள் இணைந்து வணிக பயன்பாட்டில் உள்ள கட்டிடங்கள், கடைகள், குடோவுனுக்கு கொடுக்கும் வாடகைக்கு 18% GST வரி விதித்து அதை கட்ட வேண்டும் என்று அறிவித்துள்ள நிலையில், இந்த தீர்மானத்தை GST கவுன்சில் கூட்டத்தில் எந்த மாநில அரசுகளும் எதிர்க்கவில்லை எனவும், வணிகர்களுக்கு ஏற்படும் இந்த பாதிப்பை சரி செய்ய GST கவுன்சில் தீர்மானத்தை ஒத்தி வைத்து, முழுமையாக நீக்கம் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகர் பகுதியில் உள்ள ஜவுளி கடைகள், நகை கடைகள், காய்கறி சந்தை கடைகள், மொத்த வியார கடைகள் மற்றும் தேனி சாலை, பேரையூர் சாலை, வத்தலகுண்டு சாலை மதுரை சாலையில் உள்ள கடைகள் என சுமார் 2000 ம் கடைகளை அடைத்து ஒரு நாள் கடையடைப்பு போராட்டத்தில் உசிலம்பட்டி வர்த்தகர்கள் சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர்.