• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நில நடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு வியாபாரிகள் பொதுமக்கள் அஞ்சலி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் அனைத்து கடைக்காரர்கள் நல சங்கத்தின் சார்பில் துருக்கியிலும் சிரியாவிலும் ஏற்பட்ட வரலாறு காணாத நிலநடுக்கத்தால் பலியானவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வாரு ஊர்வலமாக சென்று மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது .

துருக்கியிலும் சிரியாவிலும் நிலநடுக்கத்தால் கொத்துக்கொத்தாய் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில் கட்டிடங்களும் மனித உடல்களும் சிதைந்து கிடக்கும் காட்சியைக் கண்டு உலக மக்கள் அனைவரும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும் நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஏராளமான வீரர்களும் பொதுமக்களும் ஈடுபட்டு வருகின்றனர்கள். உன்ன உணவின்றியும் நீரின்றியும் தவிர்த்து வருகின்றனர்.

துருக்கியில் தென்கிழக்கு பகுதியில் சிரியாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள கர்ஜியான் நகரி அருகே கடந்த திங்கட்கிழமை அதிகாலை 4 மணி அளவில் 7 புள்ளி 8 ரிட்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல ஆசைகளோடு உறங்கியவர்களுக்கு விழிக்கும் முன்பே மரணம் நேரிட்டது. பல கட்டிடங்கள் தரம் மட்டமானது பலர் சிகிச்சையிலும் பலர் உயிருக்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். காயம் அடைந்தவர்களும் உயிருக்கு போராடியவர்களும் விரைந்து நலம் பெற வேண்டும் என உலகம் முழுவதிலும் பிரார்த்தனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது

மஞ்சூர் பஜார் பகுதியில் அனைத்து கடைக்காரர்கள் நல சங்கத்தின் சார்பில் அனைத்து பொதுமக்களும் ஒன்றிணைந்து தங்களது கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி பதாகைகளும் மலர் வளையங்களையும் வைத்து ஊர்வலமாக மஞ்சூர் மேல் பஜார் வரை மௌன ஊர்வலம் நடத்தப்பட்டு மஞ்சூர் பஜாரில் அனைவரும் ஒன்று கூடி ஐந்து நிமிடம் மௌன அஞ்சலி நடத்தப்பட்டது இதில் ஏராளமான பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கண்ணீர் மல்க கலந்து கொண்டனர்