• Wed. Jun 26th, 2024

கோவை மாநகரின் குடியிருப்பு, அலுவலக வளாக தேவைகளுக்கு தரமான  திட்டங்களை அறிமுகம் செய்த டவுன் & சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம்

BySeenu

Jun 16, 2024
கோவை கே.ஜி குழுமத்தை சேர்ந்த டவுன் & சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனம் கோவையின் பல்வேரு முக்கிய இடங்களில் கட்டி வரும் ப்ரீமியம் அடுக்குமாடி குடியிருப்புகள் பற்றியும் அதன் வணிக வளாக கட்டிடங்கள் பற்றியும் வரவுள்ள அடுத்த குடியிருப்பு திட்டங்கள் பற்றியும் தெரிவிக்க நிறுவனத்தின் இணை நிறுவனர் சஞ்சனா விஜயகுமார், சீனியர் துணை தலைவர் சுரேஷ் குமார் மற்றும் மார்க்கெட்டிங் மேலாளர் ஜோஷுவா ஆகியோர் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகில் சிக்நேச்சர் சிட்டி,கணபதி அருகே எலீட் சிட்டி,டைடல் பார்க் அருகே ஐகான் சிட்டி,ஹோப்ஸ் பகுதியில் அமைந்துள்ள காமராஜர் சாலையில் மெகா சிட்டி என 4 அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்களை அறிமுகம் குறித்து, செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய சஞ்சனா விஜயகுமார்:-

மெகா சிட்டி,ஐகான் சிட்டி, எலீட் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் 1 மற்றும் 2 பெட் ரூம்,ஹால்,கிட்சன் (BHK) குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றனர்.சிக்நேச்சார் சிட்டி குடியிருப்பில் ஸ்டூடியோ அப்பார்ட்மெண்ட் 1, 2 மற்றும் 3 பெட் ரூம்,ஹால்,கிட்சன் (BHK) குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றனர்.

இதற்கு அடுத்ததாக கொடிசியா அருகேயும் பீளமேடு அருகேயும் 1,2 மற்றும் 3 பெட் ரூம்,ஹால்,கிட்சன் (BHK) குடியிருப்புகள் கொண்ட டெல்டா சிட்டி மற்றும் ‘யுனைட்டட் சிட்டி’  ஆகிய அடுக்குமாடி குடியிருப்பு திட்டங்கள் விரைவில் துவங்க உள்ளனர்.

கோவையில் 40,000 சதுர அடியில் TNCD ஸ்கொயர் மற்றும் 70,000 சதுர அடியில் TNCD ஹப் எனும் இரண்டு அலுவலக வளாகங்க திட்டம் நடைபெற்று வருகிறது.TNCD ஸ்கொயர் இன்னும் 2 மாதங்களில் நிறைவு பெரும் TNCD ஹப் ஏப்ரல் 2025ல் நிறைவு பெரும்.மேலும் பிரம்மாண்ட TNCD டெக் பார்க் வளாக திட்டமும் விரைவில் துவங்க உள்ளது.

அதனையெடுத்து சுரேஷ் குமார் பேசுகையில்:-

சிக்நேச்சார் சிட்டி,ஐகான் சிட்டி மற்றும் எலீட் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பு ரூ.29.99 லட்சங்களில் இருந்து துவங்குகிறது.

மெகா சிட்டி அடுக்குமாடி குடியிருப்பு ரூ.40 லட்சம்,2 பெட் கொண்ட வீட்டின் விலை ரூ.65 லட்சம் எனவும் இந்த 2 அடுக்குமாடி குடியிருப்புகளிலும் 70-80% வீடுகள் முன்பதிவாகிவிட்டது.

8-க்கும் அதிகமான தேசியமயம் ஆக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடன் உதவி செய்து தருவதாகவும் 1 பெட் ரூம் குடியிருப்புகளுக்கு 90% வரை வங்கி கடனுதவியும்,2 பெட் ரூம் 80% கடன் உதவி கிடைக்கும் எனவும் 8.35% வட்டி முதல் ஆரம்பிக்கின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *