நீலகிரி முதுமலை வனப்பகுதியில் இருந்து உதகை நகரில் அமைந்துள்ள தென்னிந்தியாவின் இரண்டாவது உயரமான மலை சிகரமான தொட்டபெட்டா காட்சி முனையில் ஒற்றைக் காட்டு யானை நுழைந்துள்ளதால், இன்று ஒரு நாள் தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மலை மாவட்டம் நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதி கொண்ட மாவட்டமாகும். இங்கு மான், புலி, சிறுத்தை, காட்டுமாடு, யானை போன்ற வனவிலங்குகள் அதிகளவில் வசிக்கக்கூடிய மாவட்டமாகும். சமீப காலமாக வனவிலங்குகள் வனத்தை விட்டு உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வர தொடங்கி உள்ளன. இந்நிலையில் முதுமலை வனப்பகுதியில் இருந்து உதகை நகரில் அமைந்துள்ள தென்னிந்தியாவின் இரண்டாவது உயரமான மலை சிகரமான தொட்டபெட்டா காட்சி முனையில் ஒற்றை காட்டு யானை நுழைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இன்று ஒரு நாள் மட்டும் தொட்டபெட்டா காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மாவட்ட வனத்துறை சார்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது.